துபாய்

ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார் என்னும் செய்தியைத் தொடர்ந்து பல டிவி ஊடகங்கள் தங்கள் ஊகங்களை வைத்து வித்தை காட்டி வருகின்றன.

துபாயில் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி சென்ற 24ஆம் தேதி மரணம் அடைந்தது அவர் ரசிகர்களை துயரில் ஆழ்த்தி உள்ளது.   முதலில் மாரடைப்பால் அவர் மரணம் என கூறப்பட்டதும் ஊடகங்கள் அனைத்தும் அவர் உடல் இளைக்க சாப்பிட்ட மருந்துகளும்  அழகு அறுவை சிகிச்சையுமே இதற்க்கு காரணம் என்னும் பாணியில் செய்திகள் வெளியிட்டன.   ஆனால் துபாய் போலிசார் அவரது மரண அறிக்கை அளித்ததும் அவை அப்படியே மாறிப் போய் விட்டது.

அந்த அறிக்கையில் அவர் நீரில் மூழ்கி இறந்ததாக சொல்லப்பட்டிருந்தது.    ஆனால் அவர்  குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார் என உறுதிபட தெரிவிக்கவில்லை.   முழு மரண அறிக்கையும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட பின்பே அது குறித்து உண்மைகள் வெளிவரும்.   ஆனால் அதற்குள் இந்தியா ஊடகங்கள் பொறுமை காக்காமல் தங்களின் ஊகங்களை செய்தியாக வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

இந்தி செய்தி சேனலான ஏபிபி நியூஸ்  குளியல் அறையில் ஸ்ரீதேவியின் கடைசி 15 நிமிடங்களை வெளியிட முயற்சி செய்வதாக அறிவித்தது.  ஆஜ் தக் சேனல் ஸ்ரீதேவியின் மரணச் செய்தியை செய்தியாளரை ஒரு குளியல் தொட்டிக்குஅருகில் அதன் மேல் ஸ்ரீதேவியின் புகைப்படத்தை வைத்து செய்தியை சொல்ல வைத்தது.

தெலுங்கு ஊடகமான டிவி9 ஸ்ரீதேவி பாத்டப்பில் இறந்து கிடப்பது போலவும் அதை போனிகபூர் பார்ப்பது போலவும் குளியல் தொட்டியின் மேல் மது பாட்டில்கள் இருப்பது போலவும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை ஒளிபரப்பி போனிகபூர் இந்தியாவுக்கு வர அனுமதி மறுக்கப்பட்ட செய்தியை வெளியிட்டடது.,

 

ஆங்கில செய்தி சேனலான சிஎன்என் நியூஸ்18 ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் இறந்து கிடப்பது போல் ஒரு மார்பிங் புகைப்படத்தை ஒளிபரப்பியது.   டைம்ஸ் நவ் சேனல் ஸ்ரீதேவி குளியல் தொட்டியின் அருகில் நிற்பது போல ஒரு படத்தை ஒளிபரப்பி  அவருடைய உயரம் மற்றும் குளியல் தொட்டியின் அளவுகள் போன்றவற்றை விவரித்தது.    ரிபப்ளிக் டிவி ஸ்ரீதேவியின் மரணத்தையும் சுனந்தா புஷ்கரின் மரணத்தையும் ஒப்பிட்டு நிகழ்ச்சி நடத்தியது.

ஆனால் இவற்றுக்கு எல்லாம் சிகரம் வைப்பது போல தெலுங்கு செய்தி சேனல் மகா நியூஸ் இது குறித்து அந்த சேனலின் செய்தியாளரை வைத்து ஒரு லைவ் டெமோ நடத்திக் காட்டியது

[youtube https://www.youtube.com/watch?v=FegXeXeGnf4].

அதில் அந்த செய்தியாளர் ஒரு வெளிர் சிகப்பு குளியல் தொட்டியின் அருகே நின்றுக் கொண்டு “ஸ்ரீதேவி தவறி குளியல் தொட்டியில் வழுக்கி விழுந்தாரா?  அல்லது வேறு ஏதும் நடந்திருக்குமா?  ஸ்ரீதேவி உபயோகித்த குளியல் தொட்டியின் உயரம் மூன்று அடியாகவும் நீளம் 2 அடி (?) ஆகவும் தான் இருந்திருக்கும்.  அதைப்போல தொட்டிதான் இது என கூறி விட்டு அவர் அந்த குளியல் தொட்டியில் இறங்கி படுத்துக் கொள்கிறார்.  பிறகு, “ஸ்ரீதேவியின் உயரத்துக்கு அவரால் முழுக முடியாது.   நிச்சயம் தலை வெளியே தான் இருக்கும்.   ஒருவேளை யாராவது அவரை முடுக அடித்திருப்பார்களா?”  எனக் கேட்கிறார்.   அத்துடன் அவரைப் பொறுத்தவரை ஸ்ரீதேவியை யாரோ முழுக் அடித்துள்ளார்கள் என கூறுகிறார்.

இந்த செய்திகளுக்கு துபாய் ஊடகமான கலீஜ் டைம்ஸ் கடும் கண்டன தெரிவித்துள்ளது.   “ஒரு மரணம் குறித்து முடிவு செய்ய ஊடகங்களால் எவ்வாறு முடிகிறது?” எனக் கேள்வி எழுப்பி உள்ளது.