கோஹிமா :

நாகலாந்து சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  டிசிட் என்ற வாக்குச்சாவடி பகுதியில் குண்டுவெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த குண்டுவெடிப்பில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாகலாந்து மாநிலத்தில் உள்ள 59 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஆட்சியை பிடிக்க, நாகலாந்து மக்கள் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, லோக் ஜனசக்தி, தேசிய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் களத்தில் உள்ளன.

இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் மோன் மாவட்டம் டிசிட் வாக்குச்சாவடியில் திடீரென குண்டுவெடிப்பு நடந்ததாகவும், இதன் காரணமாக ஒருவருக்கு காயம் ஏற்பட்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.