டில்லி:

வரும் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் அடுத்தடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் ஓய்வுபெறுகின்றனர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்தவா ராய் மார்ச் 1ம் தேதி, ராஜேஷ் அகர்வால் மே 4ம் தேதி, மூத்த நீதிபதி செல்மேஸ்வர் ஜூன் 22ம் தேதி, ஆதர்ஷ் கோயல் ஜூலை 6ம் தேதி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ம் தேதி, குரியன் ஜோசப் நவம்பர் 29ம் தேதி, மதன் பி லோகூர் டிசம்பர் 30ம் தேதியும் ஓய்வு பெறுகின்றனர்.

ஏற்கனவே 6 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது. ஓய்வு பட்டியலில் 7 பேர் இருப்பதால் நீதிபதிகள் பணியிடத்தில் ஏற்படும் பற்றாகுறையை போக்கும் வகையில் அரசு செய்பட கொலிஜியம் விரைந்து நியமன பணிகளை முடுக்கி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் உச்சநீதிமன்ற கொலிஜியம் மூத்த வக்கீல்களான இந்து மல்கோத்ரா, உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் ஆகிய இருவரது பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.