தர்மபுரி:

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கின் 3 குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அதிமுக.வினர் நடத்திய போராட்டத்தில் தர்மபுரி அருகே வேளாண்மை ஆராய்ச்சி மையத்துக்குச் சுற்றுலா வந்த கோவை வேளாண் பல்கலைக்கழகப் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகியோர் பலியாயினர். இந்த வழக்கில் பேருந்தை எரித்த மாது, ரவீந்திரன், முனியப்பனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பி வைத்தனர். தூக்குத்தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றி ஜனாதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் 10 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால் 3 நன்னடத்தை அடிப்படையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.