மொகாடிசு:

சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் பயங்கரவாதிகளின் கார் வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோமாலியாவில் அரசுக்கு எதிரான பயங்கரவாத அமைப்பான அல் ஷாபாப் (Shabaab)  என்ற  அமைப்பு இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளது.

அரசு அலுவலகங்களை குறித்து 2 வெடிகுண்டு நிரப்பிய கார்களை கொண்டு மோதவிட்டு வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்ற தாகவும், இந்த தாக்குதல் காரணமாக பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சோமாலியா ராணுவத்தினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து, கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 5 பேர்  சுட்டு வீழ்த்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதத்தில் மொகடிசு நகரில் அல் ஷபாப் தீவிரவாதிகள் வெடிபொருள் நிரப்பிய லாரியை வெடிக்க செய்ததில் சுமார் 500-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.