
சென்னை:
பிரதமர் மோடியின் தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகையை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாளை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை அதிமுக கொண்டாடுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் அம்மா ஸ்கூட்டர் மானியம் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை பிரதமர் மோடி நாளை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார்கள்.
இதற்காக நாளை பிற்பகல் சென்னை வரும் பிரதமரின் பயணம் காரணமாக, சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பலத்த சோதனைக்குப் பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதுபோல புதுச்சேரியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]