டில்லி;
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 17-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமிர்தசரஸ் பொற்கோயிலில் வழிபாடு நடத்தினார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
.

இந்நிலையில் டில்லியில் உள்ள கனடா தூதரகத்தில் ஜஸ்டின் ட்ரூடோ, அவருடன் வந்துள்ள அதிகாரிகளு க்கு இந்தியாவுக்கான கனடா தூதர் இன்று இரவு விருந்து அளிக்கிறார். இதில் கலந்து கொள்ள காலிஸ்தான் இயக்க பயங்கரவாதி ஜஸ்பால் அத்வாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை கனடா தூதர் ரத்து செய்துள்ளார்.
கனடா பிரதமரின் காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்பட பலர் விமர்சனம் செய்த நிலையில் விருந்துக்கான அழைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஜஸ்பால் அத்வால் விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததற்காக கனடா எம்பி ரந்தீப் எஸ்.சாராய் மன்னிப்பு கோரியுள்ளார்.
‘‘இந்த அழைப்பு தனிப்பட்ட முறையில் என்னால் விடுக்கப்பட்டது. இதற்கு நான் தான் பொறுப்பு. இதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இதனால் பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
1986ம் ஆண்டு பஞ்சாப் அமைச்சராக இருந்த மால்கியாத் சிங் கொலை முயற்சி வழக்கில் ஜாஸ்பால் அத்வால் உள்பட 3 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் சீக்கிய பிரிவினைனாதிகள் குறித்து பதில் அளிக்க வேண்டிய அழுத்தம் இந்தியா வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஏற்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]