குருகிராம்:

ரியானா மாநிலத்தில் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு 7ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவன் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளான். அதில், அவரையும், அவரது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த மாணவன் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளான்.

அரியனா மாநிலத்தில் குருகிராம் நகரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவன், தனது வகுப்பு ஆசிரியருக்கு  இ-மெயில் வழியாக மிரட்டல்  விடுத்துள்ளான்.

அதில், ஆசிரியையும் அவரது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளான். இதுகுறித்து அந்த ஆசிரியை மாணவர்மீது போலீசில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து  சம்பந்தப்பட்ட மாணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அந்த மாணவனை தற்காலிக இடைநீக்கம் செய்துள்ள பள்ளி நிர்வாகம், அவனுக்கு உளவியல் தொடர்பான கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் விசாரணையின்போது, மாணவன் படித்து வரும் அதே வகுப்பில்தான் ஆசிரியையின் மகளும் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களின் பெயரும், பள்ளியின் பெயரும் வெளியிட மாநில போலீசார் மறுத்துவிட்டனர்.

இதே பள்ளியில் சமீபத்தில், 8வது வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவன், அந்த பள்ளி ஆசிரியை ஒருவரை உல்லாசமாக இருக்க அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]