ஷில்லாங்
ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியின் அபிமானியும் அவர்களை சந்தித்தவருமான ஒரு 90 வயதுப் பெண்மணியை இன்று ராகுல் காந்தி சந்தித்துள்ளார்.
ஷிலாங்கில் உள்ள திருபுரா காசில் பகுதியில் வசிப்பவர் 90 வயதான மூதாட்டி பெக்கி மார்டின். இவர் திருபுரா அரச குடும்பத்தை சேர்ந்தவரும் மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான பிரத்யுத் மானிக்யாவின் குழந்தப்பருவ தாதி ஆவார். இவர் அந்தக் காலத்தில் இருந்தே ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியின் அபிமானி ஆவார். அவர்கள் இருவரையும் பெக்கி நேரில் சந்தித்துள்ளார்.
தற்போது ஒய்வு பெற்று முதுமைப்பருவத்தில் உள்ள பெக்கி ராகுல் காந்தியை சந்திக்க விரும்பி உள்ளார். அதை அவர் பிரத்யுத்திடம் கூறுயுள்ளார். அவர் அதை ராகுல் காந்திக்கு தெரிவித்துள்ளார். ராகுலும் அந்த மூதாட்டியை சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதை ஒட்டி அவர் பெக்கியை சந்தித்து பேசி உள்ளார்.
இந்த தகவலை பிரத்யுத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். அதில் “வாக்குறுதிகள் தருவதே அதை காப்பாற்ற என்பதை ராகுல் நன்கு உணர்ந்துள்ளார். அவர் இன்று பெக்கி மார்டினை சந்தித்து சில தின்பண்டங்கள் அளித்தார். அவரை கட்டித் தழுவி உரையாற்றினார். இது எங்கள் அன்பு பெக்கிக்கு என்றும் மறக்க முடியாத சந்திப்பு. நன்றி ராகுல்ஜி” என குறிப்பிட்டுள்ளார்.
Photos from Pradyot manikya twitter page