சென்னை:
கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை என்றும், இந்தியாவில் அதை விதைப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கி உள்ள கமலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இந்நிலையில், கமலின் அரசியல் குறித்து, தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அரசியல் களத்தில் புதிய காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த கமல், நான் பூ அல்ல ; விதை… என்னை விதைத்து பாருங்கள் முளைப்பேன். என்னை நுகர்ந்து பார்த்தல் மணக்காது என்றார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மு.க.ஸ்டாலின் கருத்தை ஆமோதிப்பதாக கூறினார். கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை என்றும், இந்தியாவில் அதை விதைப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
இன்று காலை அவர் மீனவர்களிடம் அவர் நடந்துகொண்ட விதம் அவருக்கு தலைமைப்பண்பு இல்லை என்பதையே காட்டுகிறது என்று குற்றம் சாட்டிய அமைச்சர், கமலின் அரசியல் வருகை தி.மு.க-வுக்குதான் பாதிப்பு என்பதை கமல் புரியாத மொழியில் சொல்லியிருக்கிறார் என்றும், எங்களை எதிர்த்ததால்தான் கமல் போன்றோர் வெளியில் தெரிய ஆரம்பித்தனர்”.
இவ்வாறு அவர் கூறினார்.