ராமேஸ்வரம்:
இன்று அரசியல் பயணம் தொடங்கி உள்ள கமல், தனக்கு பொன்னாடை மலர் மாலை வேண்டாம் என்று அறிவித்துள்ள நிலையில் தன்னை சந்திக்க வந்த மீனவ பிரதிநிதிகளை கட்டிப்பிடித்து வாழ்த்தினார்.
அப்போது பேசிய கமல், தனக்கு பொன்னாடை போர்த்தி பழக்கம் இல்லை என்பதால், என்னையே ஆடையாக போர்த்துகிறேன் எனக்கூறி தனது கட்டிப்புடி வைத்தியத்தை தொடங்கினார்.
அரசியலுக்கு வருவதாக கடந்த ஆண்டே அறிவித்த கமல், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, இன்று தனது அரசியல் பயணத்தை அப்துல் கலாமின் வீட்டில் இருந்து தொடங்கினார்.
அதைத்தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய கமல் மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, மீன் பிடித் தொழில் முக்கியமான தொழில் என்றும் அதனை பாதுகாப்பது நமது கடமை என்றும் தெரிவித்தார். மீனவர்களது பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக தெரிவித்த கமல், தனக்கு பொன்னாடை போர்த்தி பழக்கம் இல்லை என்பதால், என்னையே ஆடையாக போர்த்துகிறேன் எனக்கூறி தன்னை சந்திக்க வந்த மீனவர்கள் அனைவரையும் கமல் கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தார்.
கமலின் கட்டிப்புடி வைத்தியம் மீனவ மக்களிடையே பெரும் சந்தோஷத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கமல் தான் ஏற்கனவே நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில், மருத்துவ மாணவராக நடித்தபோது, கட்டிப்புடி வைத்தியம் செய்து, நோயாளிகளையும், தொழிலாளர்களையும் சமாதானப்படுத்தும் காட்சி வெளியானது குறிப்பிடத்தக்கது.