நெட்டிசன்:

கௌதம் சாம் (Gowtham Sham ) அவர்களின் முகநூல் பதிவு:

 சென்ற வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏடிஎம் நோக்கி ஓடினார்கள்.

அதே சமயத்தில், 8 மணிக்கு பிறகு நீரவ் மோடியின் நகை கடையில் ஒரே இரவில் 52,000 பேர் நகை வாங்கி இருக்கிறார்கள். மறுநாள் இரவு வரை விடாமல் வியாபாரம் நடந்து இருக்கிறது. நகை வாங்கிய நபர்கள் எல்லோரும் முக்கிய புள்ளிகள் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இவர்கள் எல்லோரும் அந்த தேதியில் நகை வாங்கினாலும் முன்தேதியிட்டே பில் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் வரை முன்தேதியிட்டு பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பான்கார்ட் கொடுக்க கூடாது என்பதற்காக, பில் தனி தனியாக பிரித்து அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் வெறும் 12 மணி நேரத்தில் 90 கோடி கருப்பு பணம் வெள்ளையாக மாறியுள்ளது. மறுநாள் எவ்வளவு பணம் மாற்றப்பட்டது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. மக்கள் அங்கு வரிசையில் நின்ற போது, இங்கே நீரவ் எளிதாக அதை பயன்படுத்தி மோசடி செய்துள்ளார்.

இதன் மூலம் நீரவ் மோடியின் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் வர்த்தகம் ஆகியுள்ளது. அதேபோல் முக்கியஸ்தர்களின் கமிஷன் தொகையும் கிடைத்து இருக்கிறது. இன்னும் இதில் வெளிவர வேண்டிய தகவல்கள் நிறைய இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.