ராமேஸ்வரம் :
தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கி உள்ள கமல், காலையில் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லத்திற்கு வந்தார். அங்கு அவரது சகோதரரிடம் ஆசி பெற்ற பிறகு, கலாமின் வீட்டில் காலை உணவு சாப்பிட்டார்.
சுமார் அரை மணி நேரம் அங்கு கலாம் குடும்பத்தினர் உரையாடிய அவருக்கு கலாமின் பேரன் சலீம் அப்துல் கலாம் படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை அளித்தார்.
அதைப்பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பிய கமல், கலாம் படித்த மண்டபம் ஒன்றியம் நடுநிலைப்பள்ளியை காரில் இருந்தவாறே பார்த்துவிட்டு தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தார்.