
ஹைதராபாத்:
’அரசியலின் உண்மையான கதாநாயகன் கமல்!” என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்தியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இன்று ( 21.2.2018) அரசியல் கட்சி துவங்க இருக்கிறார். கட்சியின் பெயர், கட்சியின் கொடி, கொள்கைகளை முதலியவற்றை மதுரையில் இன்று மாலை நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கிறார்.
புதிய கட்சியை துவங்க இருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரை கமல் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில் எதிர்பாராத இடத்தில் இருந்து அவருக்கு வாழ்த்து கிடைத்திருக்கிறது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயு, கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அரசியல் குறித்து சுமார் 20 நிமிடங்கள் பேசிய சந்திரபாபு நாயுடு, இறுதியில், “ அரசியலின் உண்மையான கதாநாயகன் நீங்கள்தான்” என்று கமல்ஹாசனை வாழ்த்தினார்.
[youtube-feed feed=1]