சென்னை:

திமுக.வில் இரு பதவி வகிப்பவர்கள் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பொதுச் செயலாளர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திமுக.வில் இரு பதவி வகிப்பவர்கள் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மாவட்ட செயலாளரிடம் உடனடியாக ராஜினாமா கடிதம் வழங்க வேண்டும்.

பின்னர் மார்ச் 31ம் தேதிக்கு அந்த பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து பட்டியலை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.