ராமேஸ்வரம்:
புதிய அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரம் வந்தார்.
தீவிர அரசியலில் ஈடுபடவுள்ள நடிகர் கமல் நாளை கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை மதுரையில் அறிமுகம் செய்கிறார். இதற்கான பயணம் ராமேஸ்வரம்மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்குகிறார்.
இதற்காக கமல் இன்றிரவு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார். அங்கு கமலுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.