புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மூன்று  வருடங்களுக்கும்  மேலாக கடன் பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை தயாரித்து 15 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து  தனது வாட்ஸ்அப்பில் அவர் வெளியிட்ட செய்தியில், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய குற்றவாளி நீரவ் மோடி விவகாரத்தில் சில அதிகாரிகள் அவரை 7 ஆண்டுகளாக வங்கி அதிகாரிகள் பாதுகாத்துள்ளனர் என்பது தெரியவருவதாக தெரிவித்துள்ளார்.

இறுதியாக இப்பிரச்னை மூன்று வருடங்களுக்கு முன்பு தீவிரமடைந்தமடைந்தபோது நீரவ் மோடி தப்பிவிட்டார். இது போன்ற  மோசடிகள் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார்.

கூட்டுறவு வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 ஆண்டுகளாக பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை அதிகாரிகள் தயாரித்து, அந்த பட்டியலை அனைத்துத்துறை செயலர்களும் 15 நாள்களுக்குள் ஆய்வு செய்து தங்களது அறிக்கையை  தலைமைச் செயலர்,  ஆளுநரின் தனிச்செயலருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கிரண்படேி தெரிவித்துள்ளார்.