காஞ்சிபுரம்:

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளியான தஷ்வந்துக்கு தூக்குதண்டனை  விதித்து காஞ்சிபுரம் மகிளா நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது

நநாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னையை சேர்ந்த  சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் மற்றும்,  கொன்று எரிக்கப்பட்ட  விவரகாரத்தில், அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பலகட்ட விசாரணை நடைபெற்றதை தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கம் மாதா நகரைச் சேர்ந்த பாபு, ஸ்ரீதேவி தம்பதியின் மகள் சிறுமி ஹாசினி. இவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற வழக்கில் தஷ்வந்த் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர், பணத்துக்காக பெற்ற தாயையும் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பினார். ஆனால், போலீசார் அவரை, மும்பை போலீசாரின் உதவியுடன்  மும்பையின் அந்தேரி பகுதியில் மறைந்திருந்த தஷ்வந்த் -ஐ போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு  செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பல கட்ட விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து,  நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அதைத்தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இன்று (19ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை  3 மணி அளவில் நிதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, , அனைத்து குற்றச்சாட்டுகளி லும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்ற நீதிபதி, செக்சன் 363, 366, 354, 202, 302 மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளி என தீர்ப்பு கூறினார்.

மேலும் பாக்சோ சட்டம் 6, 7, 8 பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி என்றும்,  ஆள் கடத்தல், பாலியல் அத்துமீறல், பாலியல் துன்புறுத்தல், குற்றங்களை மறைத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் தஷ்வந்த் குற்றவாளி, எனவும்  தீர்ப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக தீர்ப்பு வழங்கப்படுவதை தொடர்ந்து நீதி மன்ற வளாகம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. மேலும், வழக்கு சம்பந்தப்பட்டவரை தவிர மற்றவர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற நீதிபதி உத்தரவிட்டு கோர்ட்டின் வாசல் மூடப்பட்டது.