சென்னை:

ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன்  இன்று ஆஜர் ஆனார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி  விசாரணை கமிஷன் சசிகலாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறது.

இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து ஆணையம் விசாரணை நடத்திய நிலையில், நேற்று 3வது முறையாக மருத்துவர் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி  விசாரணை மேற்கொண்டார்.