சென்னை:

மிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இந்த கல்வி ஆண்டு முதல் யோகா பயிற்சி தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற சித்த மருத்துவ கண்காட்சியில் கலந்து கொண்ட தமிழக கல்வி அமைச்சர்,  சித்த மருத்துவ கல்வியின்  ஆண்டு மலரை வெளியிட்டு பேசினார்.

அப்போது, தமிழக பள்ளிகளில் யோகா வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறினார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தமிழகத்தில் 13,000 யோகா ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குறிப்பிடத்தக்கது.