சென்னை:

தமிழகத்தில் உள்ள கோயில்களில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘கோவில், கோவில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோயில் வளாகங்கள், கோயில் மதில் சுவர்களை ஒட்டியுள்ள கடைகளை அகற்ற வேண்டும். சிற்பங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் மின் வயரிங் செய்ய வேண்டும்.

பெரிய கோயில்கள் அருகே தீயணைப்பு வாகனங்கள் தயாராக இருக்க வேண்டும். தீ தடுப்பு கருவிகள் பொருத்த வேண்டும். இதுகுறித்து தணிக்கை செய்ய தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். இதற்கு தேவையான அதிகாரிகள், வல்லூநர்கள், ஊழியர்கள், நிதி குறித்து 2 வாரங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.