இஸ்லாமாபாத்:
இந்தியா, அமெரிக்கா உள்பட உலக நாடுகளின் நெருக்கடிக்கு பயந்து, பாகிஸ்தானில் தங்கி உள்ள, இந்திய அரசால் தேடப்பட்டு வந்த மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதியான ஹபீஸ் சயீத்ற் பயங்கரவாதி என பாகிஸ்தான் அரசு அறிவித்து உள்ளது.
உலக நாடுகளின் நெருக்குதலுக்கு பயந்தே பாகிஸ்தான் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2008ம் ஆண்டு கடல் மார்க்கமாக மும்பை வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் நவம்பர் 26-ந்தேதி தேதி பயங்கரத் தாக்குதலை நடத்தினர். அந்த தாக்குதலில் 6 அமெரிக்கர் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த பயங்கரவாதச் செயலுக்கு மூளையாக செயல்பட்டது பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபீஸ் சயீத் என்று புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்து அறிவித்தது.
தற்போது ஜமாத்-உத்-தவா என்ற அமைப்பை நடத்திவரும் ஹபீஸ் சயீத், மில்லி முஸ்லிம் லீக் (எம்எம்எல்) ஐ என்ற பெயரில் அரசிய்ல கட்சி தொடங்கவும் பாகிஸ்தானில் முயற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் ஹபிஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா ரூ.65 கோடி என்று விலை நிர்ணயித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிலும் ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிப்பு செய்துள்ளது. மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஹபீஸ் சயீத்தை சர்வதேசப் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டது.
இதன் காரணமாக இடையில் ஹபீஸ் சயீத் மற்றும் அவன் கூட்டாளிகளை கைது செய்வதாக அறிவித்த பாகிஸ்தான் அவர்களை வீட்டுக் காவலில் சில நாட்கள் வைத்துவிட்டு பின்னர் விடுவித்து விட்டனர்.
இதன் காரணமாக உலக நாடுகள் மீண்டும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து. இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் கடும் பாதிப்புகளை உருவாக்கும் என்று அமெரிக்கா எச்சரித்தது.
இதற்கிடையில், , ‘தான் பயங்கரவாதி இல்லை. கறுப்புப் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டும்’ என்று திடீரென்று ஹபீஸ் சயீத் சார்பில் அரசுக்கு கோரிக்கை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஹபிஸ் சயீத் பயங்கரவாதி என பாகிஸ்தான் அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தான் போலீசார் ஹபீஸ் சையதின் ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைமையகம் அருகே போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை அப்புறப்படுத்தியுள்ளனர் /
உலக நாடுகளின் நெருக்கடிக்கு பயந்தே அவரை பயங்கரவாதி என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.