முஸஃபர்பூர்

ஆர் எஸ் எஸ் இயக்கம் எதிரிகளுடன் எல்லையில் போரிட தயாராக உள்ளதாக அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்

ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்.   இவர் தற்போது பீகார் மாநிலத்துக்கு 10 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார்.   பீகார் மாநிலத்தில் உள்ள முஸஃபர்பூரில்   ஆர் எஸ் எஸ் இயக்கம் சார்பில் ஒரு விழா நடைபெற்றது.   அதில் மோகன் பாகவத் உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “ஆர் எஸ் எஸ் என்பது ஒரு ராணுவ இயக்கம் அல்ல.   ஆனால் ராணுவத்தைப் போல ஒரு கட்டுப்பாடுடைய இயக்கம்.   நாட்டுக்கு தேவைப்பட்டால்,  நமது நாட்டின் அரசியல் சட்டம் அனுமதித்தால்,   இந்த இயக்கம் எல்லையில் எதிரிகளுடன் போராட தயாராக உள்ளது.

ஆர் எஸ் எஸ் நினைத்தால் எதிரியுடன் போரிட ஒரு சக்தி வாய்ந்த ராணுவத்தை விரைவில் உருவாக்க முடியும்.   ராணுவம் போரிடத் தயாராக ஆறிலிருந்து 7 மாதங்கள் தேவைப்படும்.   ஆனால் ஆர் எஸ் எஸ் இயக்கத்துக்கு போரிடத் தயாராக இரண்டு அல்லது மூன்று தினங்கள் போதுமானது”  என தெரிவித்தார்.