காந்திநகர்:
கடந்த ஆண்டு கடுமையாக மழை பொழிந்த குஜராத் மாநிலம் விரைவில் தண்ணீர் பற்றாகுறையை சந்தி க்கவுள்ளது. நர்மதா அணையில் குறைந்த அளவு தண்ணீரே இருப்பு இருப்பதால் பற்றாகுறை ஏற்படுவது உறுதியாகியுள்ளது. குஜராத்திற்கு நர்மதா அணை தான் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதா நீர் ஆதார பகுதிகளில் குறைந்த அளவே மழை பொழிந்தது தான் இதற்கு காரணம்.
இதனால் பாசனத்துக்கு தண்ணீர் கிடையாது என்று குஜராத் அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. தற்போது கையிருப்பு உள்ள தண்ணீர் சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் மண்டலங்களில் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நர்மதா வடிகால்களை நம்பியே இந்த இரு பகுதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘உள்ளூர் நீர் ஆதாரம் இல்லாமல் கோடை சாகுடியை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டாம். நர்மதா அணையில் கடந்த 15 ஆண்டுகால சராசரியில் 45 சதவீதம் தான் தண்ணீர் இருப்பு உள்ளது’’ என்று தெரிவித்துள்ளது..
‘‘நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்தல் பணியில் மாநில அரசு கவனம் செலுத்தி வந்ததால் விவசாயிகளு க்கு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அரசு தவறிவிட்டது‘‘ என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
‘‘கடந்த அக்டோபர் மாதம் முதலே நர்மதா அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக தான் இருந்தது. மாநிலத்துக்கு உரிய பங்கீடு முழுமையாக வந்து சேரவில்லை. அதனால் தற்போதுள்ள தண்ணீரின் அளவு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே போதமானதாக இருக்கும். விவசாய சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது’’ என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நர்மதா அணைக்கு நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்பது குஜராத் மாநில அரசுக்கு கண்கூடாக தெரி ந்த விஷயம். இந்த நிலையில்தான் அணை கட்டுமான பணி நிறைவு பெற்றதை அறிவிக்கும் வகையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நர்மதா விழாவை மாநில அரசு கொண்டாடியது.
இது குறித்து விவசாயிகள் சங்க தலைவர் சாகர் ராபரி கூறுகையில், ‘‘நர்மதாவில் தண்ணீர் பற்றாகுறை இருப்பதை அறிந்தும் அஜி மற்றும் நர்மதா அணை திறப்பு விழா, தேர்தல் தொடர்பான பணிகளுக்கு அதிகளவு நர்மதா நீர் வீணடிக்கப்பட்டது. வரும் 19ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நாள் அன்று சட்டமன்றத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.