டில்லி
வழக்குகள் நடப்பதை நேரடியாக ஒளிபரப்ப கோரும் வழக்கில் தலைமை வழக்கறிஞர் உதவியை உச்சநீதிமன்றம் கோரி உள்ளது.
தேசிய அளவில் முக்கியமான வழக்குகள் நடப்பதை நேரடியாக ஒளிபரப்பு செய்யக் கோரி பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவில், “நாங்கள் அனைத்து வழக்கு விவரங்களையும் ஒளிபரப்ப கோரிக்கை விடுக்கவில்லை. ஆனால் தேசிய அளவில் முக்கியமான வழக்குகள் குறித்து மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதனால் அவற்றை மட்டுமாவது ஒளிபரப்ப வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என தலைமை வழக்கறிஞரை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழக்கு தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் கொண்ட் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை அளித்த உச்சநீதிமன்ற அமர்வு அடுத்த கட்ட விசாரணையை இன்னும் இருவாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.