(மாதிரி படம்)

வேலூர்:

கோயில் தேர்கள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட  சம்பவம், வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமவேலூர் மாவட்டத்தில் புக்ழ் பெற்றது  சத்துவாச்சாரியில்  மாரியம்மன் பொன்னியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக  இரண்டு  தேர்கள்  உள்ளன. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இவை திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதில் தேரின் பெரும்பாலான பகுதிகள்  சேதமடைந்தன.

இதைக்கண்ட அந்த பகுதி  பொதுமக்கள் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கோவில் தேர்களில் “எதிர்பாராமல் தீ பிடிக்க வாய்ப்பு இல்லை. மர்ம நபர்கள் எவரோ தீ வைத்து தேர்களை எரித்திருக்கிறார்கள்” என்று சத்துவாச்சாரி பகுதி பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் காவல் துறையினர்  வழக்கு பதிவு செய்து, தேருக்கு தீ வைத்த  மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.