சென்னை,

கில இந்திய மருத்துவ நுழைவு தேர்வான, நீட் நுழைவு தேர்வு வரும் மே மாதம் 6ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வு தமிழகத்தில் 10 இடங்களில் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்த் உள்ளது.

இந்த ஆண்டு நீட் தேர்வு   மே 6ம் தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வை,  தனித்தேர்வர்கள் மற்றும் திறந்த நிலை பள்ளியில் படித்தோர் விண்ணப்பிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவம் மற்றும் பல்மருத்துவ டிப்புகளுக்கு கடந்த ஆண்டு முதல் நீட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும்  நடத்தப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வை எழுத ஆதார் எண் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம்  இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

மார்ச் 9ம் தேதி நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும், விண்ணப்பத்திற்கான கட்டணத்தை வங்கிக்கணக்கில் செலுத்த மார்ச் 10ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

10 பிளஸ் 2 என்ற   மேல்நிலைக் கல்வி தேர்ச்சியடைந்தவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய வர்கள். இயற்பியல், வேதியியல், உயிரியியல் அல்லது உயிரிதொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை ஒரு பாடமாக எடுத்து 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நடப்பு ஆண்டில் பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களும், நீட் தேர்வு எழுத தகுதியுடையவர்கள் ஆவர்.

இடஒதுக்கீட்டு பிரிவினர் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

இந்த ஆண்டு  தமிழகத்தில் 10 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்து உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளது.