திருவனந்தபுரம்:

2017ம் ஆண்டில் மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனில் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் யார்? யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து சுனில் சூசக தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை அங்கமளி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. பல்சர் சுனில், மலையாள நடிகர் திலீப் உள்பட 8 இதில் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அனைவரும் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு விசாரணைக்காக பல்சர் சுனில் நீதிமன்றம் அழைத்து வரும்போதெல்லாம் நிருபர்களிடம் உரையாடுவது வழக்கம். சுனில் குறித்தும், சதி குறித்தும் எங்களுக்கு தெரியாது என்று நடிகர் திலீப், அவரது மனைவி காவியா மாதவன் ஆகியோர் விசாரணை குழுவினரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் இந்த வழக்கில் யார்? யாருக்கு தொடர்பு இருக்கிறது என்ற தகவலை சுனில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘பணம் இருப்பவர்கள் அனைவரும் தப்பிவிட்டனர். நான் மட்டும் சிறையில் கஷ்டப்படுகிறேன். என்னை காவியா தெரியாது என்று கூறியது முட்டாள்தனமானது. என்னை அவருக்கு நன்றாக தெரியும்’’ என்றார். ஆனால், இது குறித்த விபரங்களை அவரிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டார்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ‘மேடம்’ என்று ஒருவரை குறிப்பிட்டு சில தகவல்களை தெரிவித்துள்ளார். மேடம் தான் எனக்கு உத்தரவிட்டார் என்று சுனில் கூறியதாக போலீசார் சார்பில் கேள்வி கேட்ட பென்னி பாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார்.

சுனிலுக்கு ஜாமீன் பெற இருவர்கள் முயற்சி செய்தள்ளனர். அவர்களும் மேடம் கூறியதாக தெரிவித்துள்ளனர். அந்த மேடம் யார் என்பது குறித்த விபரங்களை சுனில் நிருபர்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டார். காவியா தான் அந்த மேடமா? என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. மவுனமாகவே இருந்தார்.

பாவனா தாக்கப்பட்ட வீடியோ பதிவுகளை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று திலீப் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வீடியோ பதிவை வழங்கினால் அந்த நடிகரின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுவதோடு, அது தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்று கூறி நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும், இதை பார்க்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் நடிகர் திலீப் கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி கைது செய்யப்பட்டு 85 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 700 ஆவண சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் சிசிடிவி கேமரா பதிவுகளும் அடங்கும்.