டில்லி

க்கிரமிப்பு காஷ்மீரை மீட்க பாகிஸ்தானுடன் போர் புரிய வேண்டும் என மத்திய அமைச்சர் ஒருவர் கூறி உள்ளார்.

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.    இந்திய ராணுவ வீரர்களும்,  எல்லயோர கிராம மக்களும் மரணம் அடைவது தொடர்ந்து வருகிறது.    இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து போரிட்டு வருகிறது.   இதனால் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

தற்போது மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வேலே, “தொடர்ந்து எல்லைமீறிய தாக்குதலை பாகிஸ்தான் நிகழ்த்தி வருகிறது.    நாம் பலமுறை நமது நட்பை பாகிஸ்தானுக்கு வழங்கி இருக்கிறோம்.   ஆனால் அந்த நாடு மாறவில்லை.

இனி அவர்களுக்கு சரியான பாடம் புகட்டியாக வேண்டும்.   பாகிஸ்தானுடன் நாம் போர் புரிய வேண்டும்.   நமது நாடு புலிக்கு சமமானது.   நமக்கு முன்பு பாகிஸ்தான் ஒன்றுமே கிடையாது.

நமது நட்பை ஏற்காத அவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும்.     இந்த தாக்குதலின் மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும்.  அத்துடன் நிறுத்தாமல் பாகிஸ்தானின் சில பகுதிகளையும் பிடித்தாக வேண்டும்” எனக் கூறி உள்ளார்.