பலாசோர்,
ஒடிசாவில் உள்ள பலாசோர் என்ற இடத்தில் இந்தியாவின் பிரித்வி-2 என்ற அணு ஏவுகணை சோதனை நடைபெற்றது. இது வெற்றிகரமாக இலக்கை தாக்கியதாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று ஒடிசாவில் உள்ள பலாசோர் மாவட்ட கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட பிரித்வி-2 ஏவுகணை சேதனை வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
சண்டிகரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை நடைபெறும் இடமான பலசோர் கடற்கரையில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, இன்று முற்பகல் 11.35 மணி அளவில் ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஏவுகணை 350 கிமீ தூரத்திற்கு சென்று தாக்கும் வல்லமை பெற்றது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 18 ம் தேதி அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஒடிஷா கடற்கரையிலிருந்து அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி -1 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது பிரித்வி -2 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஒரே சமயத்தில் 500 முதல் 1000 கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது, மேலும் திரவ உந்து விசையால் இரண்டு எஞ்சின்களையும் தூண்டி குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை படைத்தது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.