டில்லி,

நாடு முழுவதும் உள்ள 4 கோடி பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, அதற்காக தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. தனி நபர் குறித்த ஆதார் தகவல்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இதற்கிடையில், ரூ.5 கொடுத்தால் ஆதார் தகவல்கள் அனைத்தும் கிடைத்துவிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி மேலும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதுபோன்ற நிலையிலும், நாட்டின் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் மத்தியஅரசு ஆதார் எண்ணை கேட்டு வருகிறது.

 

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பசு மாடுகளுக்கு ஆதார் எண் கொடுக்க மோடி அரசு, இந்த ஆண்டு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி உள்ளது.

கடந்த 1ந்தேதி நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டில், பசுக்களுக்கு அடையாள எண் வழங்க முதல் கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள பொதுமக்கள் இதுவரை ஆதார் எண் கிடைக்காம லும், வேலையில்லா திண்டாட்டம், பண பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் சூழலில், பசு மாடுக ளுக்கு ஆதார் எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஏறக்னவ கடநத ஆண்டு ஏப்ரல் மாதமே தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில்,   நாடு முழுவதும் உள்ள பசுகளுக்கு விரைவில் ஆதார் எண்ணுடன் கூடிய ஆதார் அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த தகவல் உண்மையாகி உள்ளது.