ஜோரி, காஷ்மீர்

காஷ்மீர் எல்லைப் பகுதி மாவட்டம் ரஜோரியில் நேற்று ஒரு \ராணுவ அதிகாரியும், இரு வீரர்களும் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுடப்பட்டு மரணம் அடைந்துள்ளனர்.

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நிகழ்த்துவது தொடர்ந்து வருகிறது.   நேற்று ரஜோரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் தாக்குதல் நிகழ்த்தினர்.

இந்த தாக்குதலில் ஒரு  ராணுவ அதிகாரி உட்பட நால்வர் மரணம் அடைந்துள்ளனர்.   இதையொட்டி இன்னும் 3 தினங்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த ராணுவத்தினரின் மரணத்துக்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதில் மரணம் அடைந்தவர்களில் ஒருவரான கபில் குந்து, டில்லி அருகில் உள்ள குர்கான் மாவட்டத்தை சேர்ந்தவர்.   அந்த மாவட்டத்தில் உள்ள ரன்சிகா என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.   வரும் 10 ஆம் தேதி அன்று தனது 23ஆவது பிறந்த நாளை கொண்டாட வேண்டியவர்   அவர் தனது முக நூல் பக்கத்தில் “வாழ்க்கை என்பது பெரியதாக இருக்க வேண்டும்.  நீண்டதாக அல்ல”  என இறப்பதற்கு முதல் நாள் பதிந்துள்ளார்.

பழைய இந்தித் திரைப்படமான ஆனந்த் என்னும் படத்தில் ராஜேஷ் கன்னா தான் இறப்பதற்கு முன் அமிதாப் பச்சனிடம் கூறும் வசனம் தான் இந்த பதிவு.    கபில் குந்துவும் இந்த பதிவைப் பதிந்த அடுத்த நாள் மரணம் அடைந்தது அவர் நண்பர்கள் மற்றும் சக ராணுவ வீரர்களிடையே துக்கத்தை உண்டாக்கி உள்ளது.