திருவனந்தபுரம்
கேரள மாநில நிதிநிலை அறிக்கை தற்போது கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்ப்ட்டு வருகிறது. இந்த நிதி நிலை அறிக்கையை கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் அளித்து வருகின்றனர்.
இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு.
திருமண உதவித் திட்டம் ரூ. 10000 லிருந்து ரூ. 40000 ஆக உயர்வு
ஆரம்பப் பள்ளிகள் ரூ. 43 கோடியில் புனரமைப்பு
கணினித்துறை முன்னேற்றத்துக்கு ரூ. 300 கோடி
பள்ளிக் கல்விக்கு ரூ. 33 கோடி ஒதுக்கீடு
இல்லத்தரசிகள் நலத்திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு
வீட்டு வசதிக்கு ரூ. 2500 கோடி ஒதுக்கீடு
கேரள புற்றுநோய் மருத்துவமனை விரைவில் மாநில புற்றுநோய் மையமாக மாற்றப்படும்
அனைத்து மாநில, மாவட்ட, வட்ட மருத்துவமனைகளில் வசதிகள் அதிகரிக்க ரூ. 1685 கோடி ஒதுக்கீடு
பெண்கள் நல திட்டத்திற்கு ரூ. 1267 கோடி ஒதுக்கீடு. இதில் பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதி கொச்சியில் அமைக்கப்பட உள்ளது. மேலும் சுகாதாரப் பெண் பணியாளர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது
தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலை வாழ் மக்களின் முன்னேற்றட்துக்கு ரூ. 2859 கோடி ஒதுக்கீடு.