டில்லி:
5 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களையும் அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் சார்பில் அனைத்து துறைகளுக்கும் கடந்த 16ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ‘‘ 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து அமைச்சக, துறைகளின் நிதி ஆலோசகர்கள், நிர்வாக செயலாளர்கள் காலியாக உள்ள இத்தகைய பணியிடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவது குறித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கைக்கு சில துறை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். சில அதிகாரிகள் அறையும் குறையுமாக பதிலளித்துள்ளனர். இந்த சுற்றறிக்கையை தொடர்ந்து உள்துறை அமைச்சகம் அனைத்து கூடுதல் செயலாளர்கள், இணை செயலாளர்கள், துணை ராணுவ தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து துறையினரும் அறிக்கை சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்ட மதிப்பீட்டில் பல ஆயிரம் மத்திய அரசு பணியிடங்கள் கடந்த 5 ஆண்டு மற்றும் அதற்கும் மேல் காலியாக இருப்பது தெரியவந்துள்ள என்று உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.