திருப்பதி

ந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமைலையான் கோவிலின் நடை வரும் 31ஆம் தேதி மூடப்படும்

சந்திரன், பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணம் நடைபெறுகிறது.  பூமிக்குப் பின் சந்திரன் வரும் போது சூரியனின் ஒளியை சந்திரன் மீது விழாமல்பூமி தடுத்து விடுகிறது.   இது சந்திர கிரகணம் ஆகும்.   இதே போல சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கு இடையில் வரும் போது சூரியன் பூமியில் இருந்து மறைக்கப் படுகிறது.  இது சூரிய கிரகணம் என சொல்லப்படுகிறது.

வரும் 31ஆம் தேதி அன்று சந்திரகிரகணம் நடைபெற உள்ளது.  இதனால் திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் காலை 11 மணி முதல் இரவு 1.30 வரை நடை அடைக்கப்படுகிறது.   அன்றைய தினம்  அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் காத்திருக்கும் அறைக்குள் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தேவஸ்தானம் சார்பில் அளிக்கப்படும் இலவச உணவும் அன்று ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தான ம் அறிவித்து உள்ளது.

மேலும் சந்திர கிரகணம் அன்று அனைத்துக் கோவில்களிலும் நடை அடைக்கப்படும் என தகவல்கள் வந்துள்ளன.