அகமதாபாத்:
குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியை சேர்ந்தவர் ஜெய்தீப். 2011ம் ஆண்டு இவருக்கும் இன்ஜினியரிங் மாணவி ஃபான்சி என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் தொடர்பு கிடைத்துள்ளது. காதலித்து வந்த இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த 2 மாதத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தியதாக ஜெய்தீப், இவரது சகோதரர் பியூஷ், கணவரின் பெற்றோர் விகேஷ்பாய்ல அனிதாபென் ஆகியோர் மீது ஃபான்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெய்தீப் அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் 2016ம் ஆண்டில் முறையிட்டனர். தம்பதியர் இவருவருக்கும் 20 வயதுக்குள் இருப்பதால் விவாகரத்து பெற்றுக் கொள்ளுமாறு நீதிபதி பர்திவாலா ஆலோசனை வழங்கினார்.
ஜெய்தீப் மீதான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். மேலும், கடந்த 24ம் தேதி நீதிபதி கூறுகையில், ‘‘திருமணம் முடி ந்த 2 மாதத்தில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. அதனால் திருமண முறிவு தான் இதற்கு சாரியான தீர்வாக இருக்கும். இருவரும் இளைஞர்களாக உள்ளனர்.
அதனால் திருமணத்தை முறித்துக் கொண்டு எதிர்கால வாழ்க்கைக்கு இருவரும் திட்டமிட வேண்டும். பேஸ்புக் மூலம் மேற்கொள்ளப்பட்ட நவீன கால திருமணம் இது. அதனால் இது தோல்வி அடைந்துவிட்டது’’ என்றார்.