டில்லி:

சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு டேவாஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். தொழில் செய்ய ஏற்ற நாடு இந்தியா. அமைதியாக தொழில் நடத்த விரும்பு தொழிலதிபர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவுகளில் விமர்சனம் செய்துள்ளார்.

அதில், ‘‘டேவாஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி உலக தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் அழைப்புவிடுத்த அதே நாளில் பத்மாவத் திரைப்படத்திற்கு எதிராக அகமதாபாத்தில் ஒரு கும்பல் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது. உ.பி.யில் பொது இடங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட 6 இளம் ஜோடிகள் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒரு இந்து பெண்ணை இஸ்லாமிய ஆண் திருமணம் செய்து கொண்ட விஷயத்தை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொள்வது ஏன்? என்று கேள்வி எழுப்பி அதை திரும்ப பெற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.