
சென்னை:
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டை சிறிது நேரத்துக்கு முன்பு போராட்டக்கார்ர்கள் முற்றுகையிட்டனர்.
“தமிழக அரசே தமிழக அரசே.. பேருந்து கட்டணத்தை குறை” “முதல்வரே முதல்வரே மக்கள் குரலைக் கேட்க வெளியே வா” என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும் சிலர் காவல்துறையினரையும் மீறி முதல்வரின் வீட்டை நோக்கி ஓடினர். பிறகு அவர்களையும் காவல்துறையினர் பிடித்து வாகனங்களில் ஏற்றினர். அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த காவல்துறையினர் போராட்டக்கார்ரகளை அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel