மதுரை:

துணை முதல்வராக இருக்கும் ஓபிஎஸ்-ஐ சசிகலாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தது தினகரன் தான் என்றும், பல இடங்களில் சோதனைகள் நடத்தி வரும் மத்திய அரசு, தமிழகத்தில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ள ஓபிஎஸ் வீட்டில் ரெய்டு நடத்தாது ஏன் என்று டிடிவி ஆதரவு முன்னாள் அமைச்சரான இன்பத் தமிழன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிடிவி ஆதரவாளரான  முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சேலத்தில் ஏராளமான பேருந்துகள் உள்ளது என்று குற்றம் சாட்டியவர், மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடியில் எடப்பாடிக்கும் தொடர்பு இருந்தது.. ஆனால், அவர் முதல்வரானதும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

மேலும், தமிழகம் முழுவதும் பல இடங்களில் மத்திய அரசு ரெய்டு நடத்தி வருகிறது. ஆனால்,  சொத்துக்களை வாங்கி குவித்துள்ள ஓபிஎஸ் வீட்டில் இதுவரை ரெய்டு நடத்தவில்லை… ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஓபிஎஸ் தமிழக்ததில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்துள்ளதாகவும்,   ஸ்ரீவில்லிப்புத்தூர் மட்டுமின்றி தேனி, பெரியகுளம், குமுளி ஆகிய இடங்களிலும் ஏராளமான ஏக்கர் நிலங்களை அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளனர் என்றும் கூறினார்.

திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் அமாவாசையாக நடித்து முதல்வர் ஆவது போல, தற்போதைய துணை முதல்வராக இருக்கும் ஓபிஎஸ்  முதல்வர் ஆனவர் என்றும்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைவாசம் சென்றபோது சசிகலாவிடம், தினகரன் தான் ஓபிஎஸ்-ஐ அறிமுகப்படுத்தி முதலமைச்சர் ஆக்கினார்.

இவ்வாறு அவர் பேசினார்.