டில்லி,

தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவராக பெங்களூரை சேரந்த செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்து உள்ளது.

துறைவாரியாக சாதனை செய்யும் பெண்களுக்கு, ‘முதல் பெண்மணிகள் சாதனையாளர் விருது’ என்ற விருதை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

இந்த விருதுக்கு நாடு முழுவதும் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 2017ம் ஆண்டுக்கான விருதுக்கு 112 பேரை மத்திய  பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்  தேர்வு செய்தது.

அதன்படி, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  விருதுகளை வழங்கி கவுரவித்தனர். அப்போது அவர்களுடன் மத்திய  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தியும் உடனிருந்தார்.

இந்த விருதுகளில்  தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவர் விருது,  பெங்களுரை சேர்ந்த செல்விக்கு வழங்கப்பட்டது.  இவருக்கு அவரது பெற்றோர்   14-வது வயதில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது.

ஆனால், கணவரின் சித்ரவதையை தாங்க முடியாமல், 18-வது வயதில் கணவரை பிரிந்து,  டாக்சி டிரைவராக பணிபுரிய தொடங்கினார். தற்போது, சொந்தமாக டாக்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.

செல்வியை பற்றி கனடாவை சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் எலிசா பலோஸ்சி என்பவர் ‘டிரைவிங் வித் செல்வி’ என்ற ஆவணப்படம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.