இந்திய ராணுவத்தில் பல்வேறு பணியிடங்களுகான ஆள் சேர்ப்பு முகாம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற உள்ளது.
இதற்கான குறைந்த பட்ச கல்வி தகுதி10ம் வகுப்பு தேர்ச்சி. உயரம் 162 முதல் 165 செ.மீ. வரை.
குறைந்த பட்ச வயது 17 முதல்
பணி நியமனம் செய்யப்படும் இடம்: இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு இடம்
பதவிகள் விவரம்: படைப்பிரிவுகளில் உள்ள SGD, STT, CLK, SNA, STA, TDN போற்றைவைகள்.
ஏற்கனவே சென்னை காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த விண்ணப்ப தாரர்களுக்கான தகுதி தேர்வு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த ஆள்சேர்ப்பு முகாம் புதுச்சேரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் 3 ந்தேதி முதல்ர 12 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, காரக்குடி பகுயை நேர்ந்த விண்ணப்ப தாரர்களுக்கு திருச்சியில் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.02.2018 (பிப்ரவரி 21) 22ந்தேதி முதல் விண்ணப்பித்தவர்களுக்கான அட்மிட் கார்டு 23ந்தேதி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் நாள் : 09.03.2018 முதல் 16.03.2018 வரை
கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தேனி, சேலம், நாமக்கல், திருப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள், ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய கடைசி நாள் 31-3-2018 என்றும், அட்மிட் கார்டு 01-04-2018 அன்று கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு
https://joinindianarmy.nic.in/alpha/officers-notifications.htm
என்ற இணையதளத்தை பார்க்கவும்..