சென்னை,

டுத்த மாதம் 1ந்தேதி முதல் மார்ச் மாதம் 22ந்தேதி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்ட நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல், மற்றும் நடிகர்கள் ரஜினி கமல் புதிய கட்சி தொடக்கம் போன்ற பரபரப்பான சூழ்நிலையில், திமுக மாவட்ட செயலாளர்களுடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தும் ஆய்வும் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டம்  வரும் பிப்ரவரி 1ந் தேதி தொடங்கி  மார்ச் 22ந்தி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக  திமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்களுடன்  ஸ்டாலின்  ஆய்வு கூட்டம் நடத்து கிறார்.

திமுக-வின் பணிகளை செம்மைப்படுத்தவும, திமுகவை மேலும் வலுப்படுத்தவும்  இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திமுக தலைமை கழகமான  அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. பணிகள் குறித்து மாவட்ட வாரியாக ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரையுள்ள நிர்வாகிகள் மற்றும் தி.மு.க.வின் அனைத்து துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களையும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்த இருக்கிறார்.

கட்சி பணிகளை செம்மைப்படுத்த நடைபெறும் இக்கூட்டம் மாவட்ட வாரியாக கீழ்க்கண்ட அட்டவணைப்படி குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்றும், தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் எனவும் தலைமை கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பிப்ரவரி மாதம்

1.2.2018-ந்தேதி :  காலை- கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு,

                               மாலை- நீலகிரி.

3-ந்தேதி: காலை- கோவை வடக்கு, மாலை- கோவை தெற்கு.

7-ந்தேதி: காலை- ஈரோடு வடக்கு, மாலை- ஈரோடு தெற்கு.

8-ந்தேதி: காலை திருப்பூர் வடக்கு, மாலை- திருப்பூர் தெற்கு.

9-ந்தேதி: காலை- சேலம் கிழக்கு, மாலை-சேலம் மேற்கு.

10-ந்தேதி:  காலை- சேலம் மத்தி, மாலை- தருமபுரி.

12-ந்தேதி: காலை – நாமக்கல் கிழக்கு, மாலை- நாமக்கல் மேற்கு.

13-ந்தேதி : காலை- திருச்சி வடக்கு, மாலை- திருச்சி தெற்கு.

14-ந்தேதி: காலை- பெரம்பலூர், மாலை- அரியலூர்.

15-ந்தேதி: காலை- கரூர், மாலை- திருவாரூர்.

16-ந்தேதி: காலை – புதுக்கோட்டை வடக்கு, மாலை- புதுக்கோட்டை தெற்கு.

21-ந்தேதி: காலை- தஞ்சை வடக்கு, மாலை- தஞ்சை தெற்கு.

22-ந்தேதி: காலை- நாகை வடக்கு, மாலை- நாகை தெற்கு.

23-ந்தேதி: காலை- மதுரை மாநகர் வடக்கு, மதுரை மாநகர் தெற்கு.

27-ந்தேதி: காலை- மதுரை வடக்கு, மாலை- மதுரை தெற்கு

28-ந்தேதி: காலை- ராமநாதபுரம், மாலை- சிவகங்கை.

மார்ச் மாதம்

2-ந்தேதி:- காலை- தேனி, மாலை- திருநெல்வேலி மத்தி.

3-ந்தேதி:- காலை- திருநெல்வேலி கிழக்கு, மாலை- திருநெல்வேலி மேற்கு.

5-ந்தேதி:- காலை- விருதுநகர் வடக்கு, மாலை- விருதுநகர் தெற்கு.

7-ந்தேதி:– காலை- தூத்துக்குடி வடக்கு, மாலை- தூத்துக்குடி தெற்கு.

9-ந்தேதி:– காலை- கன்னியாகுமரி கிழக்கு, மாலை- கன்னியாகுமரி மேற்கு.

10-ந்தேதி:- காலை- திண்டுக்கல் கிழக்கு, மாலை- திண்டுக்கல் மேற்கு.

11-ந்தேதி:- காலை- திருவண்ணாமலை வடக்கு, மாலை- திருவண்ணாமலை தெற்கு.

12-ந்தேதி:- காலை- விழுப்புரம் வடக்கு, மாலை- விழுப்புரம் தெற்கு.

13-ந்தேதி:- காலை- வேலூர் கிழக்கு, மாலை- வேலூர் மேற்கு.

14-ந்தேதி:- காலை- வேலூர் மத்தி, மாலை- விழுப்புரம் மத்தி.

15-ந்தேதி:- காலை- கடலூர் கிழக்கு, மாலை- கடலூர் மேற்கு.

16-ந்தேதி:- காலை- கிருஷ்ணகிரி கிழக்கு, மாலை- கிருஷ்ணகிரி மேற்கு.

17-ந்தேதி:- காலை- காஞ்சீ புரம் வடக்கு, மாலை- காஞ்சீபுரம் தெற்கு.

18-ந்தேதி:- காலை- திருவள்ளூர் வடக்கு, மாலை- திருவள்ளூர் தெற்கு.

20-ந்தேதி:- காலை- சென்னை மேற்கு, மாலை- சென்னை தெற்கு.

22-ந்தேதி:- காலை- சென்னை வடக்கு, மாலை- சென்னை கிழக்கு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.