ஈரோடு:

2020-ம் ஆண்டில் சூரியனை ஆய்வு செய்ய செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

கோபி செட்டி பாளையம் வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாணவர்கள் குறைந்த எடையுள்ள செயற்கை கோளை தயாரித்தால் இலவசமாக விண்ணில் செலுத்தப்படும். இளம் விஞ்ஞானிகள் புதிய உத்திகளை கண்டறிவதுடன் புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும்.

மாணவர்கள் செயற்கை கோள் தயாரிப்பில் ஈடுபட்டால் வியாபார ரீதியாக வெளிநாடுகளுக்கும் வழங்க முடியும். ஆண்டிற்கு 12 செயற்கை கோள் மூலம் 18 செயற்கை கோளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 2020-ம் ஆண்டில் சூரியனை ஆய்வு செய்ய செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும்’’ என்றார்.