டில்லி:

20 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்று தெரியவந்துள்ளது.

டில்லி சட்டமன்றத்தில் மொத்தம் 70 எம்எல்ஏ.க்கள். 2015ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் 67 பேர் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தனர். இதில் 20 பேர் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மீதம் 47 பேர் உள்ளனர். பெரும்பான்மைக்கு 36 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே போதுமானது. பா.ஜ. வசம் 3 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியிடம் ஒரு எம்எல்ஏ.க்கள் கூட இல்லை.

இரட்டை பதவி விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி தான் முதன் முதலில் குரல் கொடுத்தது. 2016ம் ஆண்டில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தேர்தல் கமிஷன் தாவ் 20 பேரை தகுதி நீக்க பரிந்துரைந்தது. இதன் அடிப்படையிலேயே தற்போது 20 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.