சென்னை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேருந்துக் கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் எங்கும் நேற்று முதல் அமுலாகி உள்ள பேருந்துக் கட்டண உயர்வுக்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு இந்தக் கட்டண உயர்வை திரும்பப் பெற முடியாது என அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “பேருந்துகள் தற்போது கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. பேருந்துகள் மக்களுடையது. அதனால் அந்த பேருந்துகளின் நஷ்டத்தை மக்கள் தான் சரி செய்யவேண்டும்” எனக் கூறி உள்ளார். இதே போல திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் குறைவு எனக் கூறி உள்ளார்.
அமைச்சர்கள் இது போல பேருந்துக் கட்டணத்தை நியாயப் படுத்தி பேசும் பேச்சுக்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் உண்டாக்கி உள்ளது.