டில்லி
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்து ஒழுங்கின்மை காரணமாக பிரவின் தொகாடியா விரைவில் வெளியேற்றப்படுவார் என அந்த அமைப்பை சேர்ந்த சாமி சின்மயானந்தர் கூறி உள்ளார்,
விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஆட்சேபகரமான உரைக்காக கைது செய்ய நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்தது. அதன் பிறகு அவர் காணாமல் போனார். பிறகு அவர் சுயநினைவற்ற நிலையில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுய நினைவு வந்ததும் அவர் விஸ்வ இந்து பரிஷத், பிரதமர் மோடி, காவல்துறை ஆகியோரின் மீது கடும் குற்றங்கள் சுமத்தினார். தன்\னை விஸ்வ இந்து பரிஷத் ஓரம் கட்டி வருவதாகவும், பிரதமர் மோடி தனது ராமர் கோவில் குறித்த கருத்துக்களால் தன் மீது அதிருப்தியில் உள்ளதாகவும், காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் கொலை செய்ய திட்டம் இட்டுள்ளதாகவும் கூறினார். அவரது இந்த கண்ணீருடன் கூடிய சரமாரி குற்றச்சாட்டு அரசியல் உலகில் பரபரப்பை உண்டாக்கியது.
விஸ்வ இந்தி பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாமி சின்மயானந்தர் பிரவின் தொகாடியா கூறியதை மறுத்துள்ளார். அவர், “பிரவின் தொகடியா கூறியது மிகவும் அர்த்தமற்ற குற்றச்சாட்டு. அவரின் ஒழுங்கின்மையை இது காட்டுகிறது. அவரை யாரும் ஒதுக்கி வைக்கவில்லை. அவர் இவ்வாறு கூறி வருவது பலருக்கும் மன வருத்தத்தை அளித்துள்ளது. இதற்கு மேலும் இயக்கம் அவரது நடவடிக்கையை பொறுத்துக் கொள்ளாது. இந்த நடவடிக்கைக்காக அவர் விரைவில் விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்.” என்
று தெரிவித்துள்ளார்.