டெல்லி:

புதிய வாட்ஸ்அப் அப்ளிகேஷனான பிசினெஸ் ஆப் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

உலகின் அனைத்து நாடுகளிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் வரிசையில் வாட்ஸ் ஆப் முக்கியமான இடத்தில் வசிக்கிறது.   வாட்ஸ் ஆப்பில் அலுவலக பயன்பாடு தொடங்கி குடும்ப சண்டை வரை அனைத்தும் செய்யப்படுகிறது.

வியாபார பயன்பாட்டிற்காக புதிய அப்ளிகேஷனை வாட்ஸ் ஆப் வெளியிட திட்டமிட்டு இருந்தது. பல நாட்களாக பாதுகாப்பாக இந்த சோதனையை செய்து வந்தது.   தற்போது அணு ஆயுத சோதனை முடிவு போல இதை வெளியிட்டுள்ளது.    இந்த ஆப் இப்போது அமெரிக்காவில் முழுக்க முழுக்க பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

முழுக்க முழுக்க வியாபார பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் இந்த ஆப் இந்தியாவில் இருக்கும் சிறிய நிறுவனங்கள் அனைத்தும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி வியாபாரம் ஆரம்பிக்கும் விருப்பம் உள்ள அனைவரும் இதை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்ளிகேஷன் மூலம் தகவல்கள் அனுப்பலாம். இது முழுக்க முழுக்க இலவசமாகும். தங்கள் நிறுவனத்தின் திட்டங்கள் என்ன, மாற்றங்கள் என்ன என எல்லாமும் இந்த ஆப் மூலம் அனுப்பலாம்.  இதுவும் வாட்ஸ் ஆப் போல டவுன்லோட் செய்து அக்கவுண்ட் ஓபன் செய்தால் போதும்.

வாடிக்கையாளர்களுக்கு இதனால் நிறைய பயன் உள்ளது. திரைப்பட முன்பதிவு, நிகழ்ச்சி முன்பதிவு, பொருட்களின் விலை, விசேஷ தள்ளுபடிகள் எல்லாம் இனி இந்த ஆப் மூலம் நமக்கு அனுப்பப்படும்.  கூகுளில் தேவை இல்லாமல் தேடி நேரத்தினை வீணடிக்க வேண்டியதில்லை. வெகு நாள் கஸ்டமர்களுக்கு சிறப்பு தகவல்களும் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த ஆப் மூலம் உங்களுக்கு எல்லோரும் தகவல் அனுப்ப முடியாது.  யாரிடம் உங்களுடைய எண் இருக்கிறதோ அந்த நபர்கள் மட்டுமே உங்களுக்கு மெசேஜ் அனுப்புவார்கள். அதுமட்டுமின்றி அவர்களை தேவைப்பட்டால் நீங்கள் பிளாக் செய்து கொள்ள முடியும் என்பதால் இது மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்த ஆப் இப்போது அமெரிக்காவில் செயல்பாட்டிற்கு வந்து இருக்கிறது . தவிர இந்தோனீசியா, இத்தாலி, மெக்சிகோ, இங்கிலாந்தில் இந்த ஆப் அறிமுகம் ஆகியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டு உள்ளது.