கோவை,
எம்ஜிஆர் பிறந்த நாளன்று தனிக்கட்சி தொடங்கும் அறிவிப்பு வெளியிடப்போவதாக பரபரப்பை ஏற்படுத்திய டிடிவி தினகரன், பின்னர் கூலாக அப்படியொரு எண்ணமே கிடையாது என்று கூறி நழுவினார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், தற்போதைக்கு தனிக்கட்சி தொடங்கினால், அது பிரச்சனை ஆகிவிடும்…எனவே, நாங்கள் அதிமுக அம்மா அணி என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட நீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறி உள்ளார்.
கடந்த 16ந்தேதி புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து 17ந்தேதி எம்ஜிஆர் பிறந்தநாளன்று புதிய கட்சி குறித்து அறிவிப்பதாகவும், அதுகுறித்து ஏற்கனவே சசிகலாவிடம் ஆலோசித்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனிக்கட்சி தொடங்கும் திட்டமில்லை என்றும், அதிமுகவை மீட்டெடுப்போம் என்று கூறினார்.
இந்நிலையில், இன்று கோவை மாவட்டம் பன்னாரி வந்த டிடிவி, அங்குள்ளா பன்னாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், தற்போதைக்கு தனிக்கட்சி தொடங்கினால், அது பிரச்சனை ஆகிவிடும்…எனவே, நாங்கள் அதிமுக அம்மா அணி என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட நீதிமன்றத்தை நாடுவோம் என்றும், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தால் புதிய கட்சி குறித்து அப்போது அறிவிப்போம் என்று கூறி உள்ளார்.