டில்லி

டில்லி சென்றுள்ள துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நிதி அமைச்சரிடம் பேசிய விவரங்கள் இதோ :

மத்திய அரசு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.   அதை ஒட்டி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.   தமிழகத்தின் சார்பில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கலந்துக் கொண்டார்.    அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது அவர் தாம் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பேசியது என்ன என்பதைப் பற்றி தெரிவித்துள்ளார்.

அவர், “தமிழகத்தில் தற்போதுள்ள நீர்ப் பற்றாக்குறை பற்றி நான் எடுத்துரைத்தேன்.   காவிரி நதி நீர் பிரச்னை பற்றியும் பேசினேன்.   மற்றும் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாற்றினை இணைக்கும் பணி குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளேன்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க கால தாமதம் ஆகி வருகிறது.   தமிழ் நாட்டில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்பதையும் எப்போது அமைக்கப்படும் என்பதை அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன்.

தமிழகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு  கோரிக்கை விடுத்துள்ளேன்.    இது தவிர  தமிழகத்துக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்துள்ளேன்.   மத்திய அமைச்சரின் மௌனத்தை நாம் சம்மதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்”  எனக் கூறி உள்ளார்.