ஸ்ரீவில்லிபுத்தூர் :
ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தாகவும் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தாத இந்துத்துவவாதிகள் கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது மிகக் கடுமையாக விமர்சனம் வைத்தனர். அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்து அமைப்புக்கள் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. வைரமுத்து மீது விருதுநகர் மற்றும் சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக, ‘வாழ்க இந்து நீதி தர்மம்’ எனும் தலைப்பில் ஜீயர்கள், மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள், இந்து அமைப்புகள், பங்கேற்ற பிரமாண்ட கூட்டம், சென்னை, அரசு விருந்தினர் மாளிகை அருகே நடந்தது. அதில் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரீனாவில் மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் என்று பேசப்பட்டது.
இந்த நிலையில் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதிக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் தெரிவித்திருந்தார். இதை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உண்ணாவிரதம் துவங்கியிருக்கிறார்கள்.
உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி, அறநிலை துறை உதவி கமிஷனர் ஹரிஹரன் மற்றும் டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஜீயர் சுவாமிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.